×

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்து, டாஸ்மாக் கடைகள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் விபரம் அனைத்து துணிக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி வணிக வளாகங்கள் (Shopping Complex/ Mall ) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி! உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்பட
 

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்து, டாஸ்மாக் கடைகள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள் விபரம்

அனைத்து துணிக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

வணிக வளாகங்கள் (Shopping Complex/ Mall ) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி!

உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்பட அனுமதி

மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்

அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி

தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி

மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் பயணிக்க அனுமதி

மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க நடைமுறையில் இருந்த இ.பதிவு முறை ரத்து

ஹோட்டல்கள், பேக்கரிகள் டீக்கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவீத அளவிற்கு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடவும் தேநீர் அருந்தவும் அனுமதி