×

ஊரடங்கு நீட்டிப்பு நிச்சயம்… ஆனால் ஊரடங்கில் தளர்வுகள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் 35 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு 27 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் கொரோனா பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
 

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் 35 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு 27 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் கொரோனா பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்படி, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கவும், கொரோனா பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் மீண்டும் அனுமதிக்கப்படவும் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.