×

கொரோனாவால் இறந்த முதியவர் : சாலையில் நின்றபடி ஆம்புலன்ஸை பார்த்து கதறிய குடும்பத்தினர்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட3,943 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட3,943 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது.  இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த 67 வயதான முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் கடந்த 28ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லி மூலம் காட்டுப்பாக்கத்தில் உள்ள மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போது அவரது குடும்பத்தினர் பூந்தமல்லி டிரங்க் சாலையில் நின்றபடி ஆம்புலன்சை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது