×

“லட்சுமணன் சரித்திர புகழ் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியவர்” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த இவர் சென்னை மற்றும் கேரள உயர்நீதிமன்றங்களில் பணியாற்றியுள்ளார். 2002 -2006 ஆம் ஆண்டு வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். சட்ட ஆணைய தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் தமிழகம் சார்பாக இடம் பெற்றிருந்தார். நீதியரசர் லட்சுமணன் மறைவுக்கு ப. சிதம்பரம், வைரமுத்து, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும்
 

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த இவர் சென்னை மற்றும் கேரள உயர்நீதிமன்றங்களில் பணியாற்றியுள்ளார்.

2002 -2006 ஆம் ஆண்டு வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். சட்ட ஆணைய தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் தமிழகம் சார்பாக இடம் பெற்றிருந்தார். நீதியரசர் லட்சுமணன் மறைவுக்கு ப. சிதம்பரம், வைரமுத்து, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில், “உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி லட்சுமணன் சரித்திர புகழ் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியவர். லட்சுமணன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல்”என்று கூறியுள்ளார்.