×

“பிரசவத்துக்கு சென்ற இளம்பெண் மரணம்” உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

சாத்தூர் அருகே பிரசவத்தின் போது இளம்பெண் உயிரிழந்ததை கண்டித்து, உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அமீர்பாளைய பகுதியை சேர்ந்தவர் முருகேன். இவரது மனைவி பாண்டீஸ்வரி (21). இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த மாதம், பிரசவத்திற்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட அதிகப்படியான உத்திரப்போக்கால், பாண்டீஸ்வரி உடல்நிலை மோசமாக இருந்துள்ளது. இதற்கு மருத்துவர்களும் செவிலியர்களும் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனத்
 

சாத்தூர் அருகே பிரசவத்தின் போது இளம்பெண் உயிரிழந்ததை கண்டித்து, உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அமீர்பாளைய பகுதியை சேர்ந்தவர் முருகேன். இவரது மனைவி பாண்டீஸ்வரி (21). இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த மாதம், பிரசவத்திற்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட அதிகப்படியான உத்திரப்போக்கால், பாண்டீஸ்வரி உடல்நிலை மோசமாக இருந்துள்ளது.

இதற்கு மருத்துவர்களும் செவிலியர்களும் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் பாண்டீஸ்வரியின் உடல்நிலை மோசமாகிய நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். அதிக உத்திரப்போக்கால் பாண்டீஸ்வரி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்களும் ஆதித்தமிழர் கட்சியினரும் அம்மருத்துவமனை மருத்துவர்களையும் செவிலியர்களையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.