×

புதிய தளர்வுகளுடன் தமிழகத்தில் தொடரும் லாக்டெளன்

கொரோனா எனும் வார்த்தையே இப்போதெல்லாம் பயத்தைக் கொடுப்பதாக மாறிவிட்டது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் இதன் பரவல் தொடங்கியது. உடனே அம்மாத இறுதியில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. அதனால், நாடே முடங்கியது என்றே சொல்ல வேண்டும். மார்ச் இறுதியில் தொடங்கிய லாக்டெளன் ஆகஸ்ட் 1-ம் தேதியான இன்றும் தொடர்கிறது. ஆனால், அவ்வப்போது சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அதன்படி மத்திய அரசு ஆகஸ்ட் 1-லிருந்து இ-பாஸ் விலக்கு உள்ளிட்ட சில தளர்வுகளை அளித்தது. குறிப்பாக,
 

கொரோனா எனும் வார்த்தையே இப்போதெல்லாம் பயத்தைக் கொடுப்பதாக மாறிவிட்டது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் இதன் பரவல் தொடங்கியது. உடனே அம்மாத இறுதியில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. அதனால், நாடே முடங்கியது என்றே சொல்ல வேண்டும்.

மார்ச் இறுதியில் தொடங்கிய லாக்டெளன் ஆகஸ்ட் 1-ம் தேதியான இன்றும் தொடர்கிறது. ஆனால், அவ்வப்போது சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

அதன்படி மத்திய அரசு ஆகஸ்ட் 1-லிருந்து இ-பாஸ் விலக்கு உள்ளிட்ட சில தளர்வுகளை அளித்தது. குறிப்பாக, மாநிலங்களுக்குள் பயணிக்க இ-பாஸ் அவசியம் என்பதைத் தளர்த்தியது. மேலும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் இயங்க அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு ஓரிரு தளர்வுகளை மட்டும் அறிவித்து ஆகஸ்ட் 31 – ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

மாநிலத்தின் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றோரு மாவட்டத்திற்குச் செல்ல அவசியம் இ-பாஸ் தேவை. பொதுப் போக்குவரத்தும் இம்மாத இறுதி வரை கிடையாது. உடற்பயிற்சி நிலையங்கள் இயங்க விதிக்கப்பட்ட தடை நீங்கும்.

அரசியல், சமுதாய, விளையாட்டு, ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை நீட்டிக்கிறது. குறிப்பாக, சமய, கோவில் திருவிழாக்கள் நடத்தக்கூடாது. ஏனெனில் அங்கு வரும் கூட்டம் அதிகளவில் இருக்கும். எனவே, ஒவ்வொருவரையும் சோதிப்பது சாத்தியமே இல்லாதது. அதனால் கொரோனா நோய்த் தொற்று பரவ வாய்ப்பு அதிகம்.

ஆகஸ்ட் 1-லிருந்து தளர்வுகள் எனப் பார்க்கையில், சென்னையில் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகள் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 75 சதவிகித தொழிலாளர்களுடன் இயங்கலாம்.

உணவகங்களில் காலை 6 மணிமுதல் மாலை 9 மணி வரை பார்சல் அளிக்க அனுமதி.

10000 ரூபாய் ஆண்டு வருமானம் கொண்ட கோவில், மசூதி, தேவாலயங்களில் மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் வழிபட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

மின் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி.

பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர் உள்ளிட்டவைக்கு இம்மாத இறுதி வரை அல்லது மறு அறிவிப்பு வரும்வரை அனுமதி இல்லை.

புதிய தளர்வுகளுடன் லாக்டெளன் தமிழகத்தில் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.