×

நவம்பர் 6 ஆம் தேதி முதல் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டம்!

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, “அனைவருக்கும் ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள். அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் நீட் தேர்வில் இட ஒதிக்கீடு 7.5% கொடுக்கப்பட்டு அந்த சட்டமானது சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு பயன்படக்கூடிய இந்த சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆளுநர் மேலும் காலதாமதம் ஏற்படுத்தாமல்
 

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, “அனைவருக்கும் ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள். அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் நீட் தேர்வில் இட ஒதிக்கீடு 7.5% கொடுக்கப்பட்டு அந்த சட்டமானது சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு பயன்படக்கூடிய இந்த சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆளுநர் மேலும் காலதாமதம் ஏற்படுத்தாமல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை தமிழகம் முழுவதும் வெற்றி வேல் யாத்திரை மேற்கொள்ளவுள்ளோம். திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரி அணி சார்பில் வரும் செவ்வாய் கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும். மனு தர்மம் எங்கே இருக்கிறது ? 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் அரசியல் சாசனம் மட்டுமே நடைமுறையில் உள்ளது” எனக்கூறினார்.