×

குழந்தை வரும் தரும் குமார சஷ்டி விரதம் : இந்த மாதத்தில் எப்போது தெரியுமா?

சுப்பிரமணியன், முருகன், தண்டாயுதபாணி, வேலவன், ஆறுமுகம் என பல்வேறு நாமங்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். சிவனின் அருளால் தோன்றி அந்த சிவனுக்கே வேதத்திற்கு பொருளை கூறியவன் முருகன். தண்தமிழ் தெய்வமாக விளங்கும் முருகப்பெருமான் தமிழ் புலவர்கள் அனேக நூல்கள் பாடியுள்ளனர்.முருகன் ஆலயங்களில் நடைபெறும் பெரும் திருவிழாவின் நான்காம் நாள் இரவில் நாக வாகனத்தில் முருகப்பெருமானை எழுந்தருள வைத்து உலா வருகின்றனர். அதற்கென ஆலயங்களில் நாக வடிவிலான தேரை செய்து வண்ணங்கள் தீட்டப்பட்டு பொலிவுடன் விளங்கும் பெரிய வாகனங்கள்
 

சுப்பிரமணியன், முருகன், தண்டாயுதபாணி, வேலவன், ஆறுமுகம் என பல்வேறு நாமங்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். சிவனின் அருளால் தோன்றி அந்த சிவனுக்கே வேதத்திற்கு பொருளை கூறியவன் முருகன். தண்தமிழ் தெய்வமாக விளங்கும் முருகப்பெருமான் தமிழ் புலவர்கள் அனேக நூல்கள் பாடியுள்ளனர்.முருகன் ஆலயங்களில் நடைபெறும் பெரும் திருவிழாவின் நான்காம் நாள் இரவில் நாக வாகனத்தில் முருகப்பெருமானை எழுந்தருள வைத்து உலா வருகின்றனர். அதற்கென ஆலயங்களில் நாக வடிவிலான தேரை செய்து வண்ணங்கள் தீட்டப்பட்டு பொலிவுடன் விளங்கும் பெரிய வாகனங்கள் உருவாக்கப்படுகின்றன. இப்படி முருகப்பெருமானுக்கு பல சிறப்புகள் உள்ளன.

சித்தர்கள் குண்டலினி என்னும் யோக சக்தியை பாம்பாக வடிவமாக கொள்வர். அது மனிதனின் உடலில் இடுப்பின் கீழ்ப் பகுதியில் சுருண்டு தொங்கும் நிலையில் உள்ளது என்பர். அதனை விழிப்புறச் செய்து ஆராதனைகளை கடப்பது யோகநெறி எனப்படும். மூச்சுக் காற்றை கட்டுப்படுத்தி குண்டலினியை அனல் மூட்டி அதனை எழுப்புவது யோகக் கலையின் முதற்படி. சிவபெருமானால் நெருப்பால் உருவாகி, காற்று கடவுளால் சரவண பொய்கையில் விடப்பட்டு, பின் 6 வடிவம் கொண்டு எழுந்து நின்றான் முருகன். இதை கருத்தில் கொண்டே முருகன் நாக வாகனத்தில் வருகை புரிகிறான்.

இத்தகைய சிறப்புகள் கொண்ட முருகனுக்கு மழலை வரம் அருளும், குமார சஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் எனப்படும். கார்த்திகை மாத வளர்பிறை குமார சஷ்டியை சுப்பிரமணிய சஷ்டி என்றும் அனந்த சுப்ரமணியன் பூஜை என்றும் கூறுவர். அனந்த சுப்ரமணியன் பூஜை அனந்தன் = நாகம்;சுப்புராயன் என்ற பெயர் முருகனையும், நாகப் பாம்பையும் ஒருங்கே குறிப்பிடப்படுகின்றது. மழலை வரம் வேண்டி இந்த இரண்டு மாதங்களிலும் வரும் குமார சஷ்டி அன்று அனந்த நாக சுப்பிரமணியர் பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும். குமார சஷ்டி விரதம் இந்த மாதம் 16ஆம் தேதி வருகிறது.