×

பி.இ. படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செ.17ஆம் தேதி வெளியிடப்படும் – அமைச்சர் கே.பி.அன்பழகன்

12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பம் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி ஆரம்பமாகி மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த 16 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது. ஒரே கட்-ஆப் மதிப்பெண் கொண்ட பலரையும் வரிசைப்படுத்த ரேண்டம் எண் பயன்படும் எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய
 

12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பம் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி ஆரம்பமாகி மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த 16 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது. ஒரே கட்-ஆப் மதிப்பெண் கொண்ட பலரையும் வரிசைப்படுத்த ரேண்டம் எண் பயன்படும் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், “அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்வி கட்டணம் உயர்வு இல்லை. கடந்தாண்டு 480 ஆக இருந்த பொறியியல் கல்லூரிகள், இந்தாண்டு அது 458 கல்லூரிகளாக குறைந்துள்ளது. புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு செயலாளர் தலைமையில் ஆராய்ந்து குழு அமைக்கப்படும். கட்டணம் கட்டிவிட்டு தேர்வு எழுத தயாராக இருந்த அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள். தொலைதூர கல்வியில் ஈடுபடும் மாணவர்களுக்கும் இது பொருந்தும். பி.இ. படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செ.17ஆம் தேதி வெளியிடப்படும்” எனக் கூறினார்