×

அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும்: அமைச்சர் அன்பழகன்

தமிழகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பால் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே பத்தாம் க்ளாஸ் மாணவர்கள் பரீட்சை எழுதாமல் ஆள் பாஸ் என அறிவிக்கப்பட்டதில் ,சுமாராக படிக்கும் மாணவர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றார். தொடர்ந்து பல்கலைக்கழக ,கல்லூரி மாணவர்கள் இறுதியாண்டு தவிர மற்ற அனைத்து அரியர் பாட தேர்வுகளிலும் ஆள் பாஸ் என்ற அறிவிப்பால் கல்லூரி மாணவர்களின் இதயத்திலும் இடம் பிடித்தார். இந்நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே ஏ.ஐ.சி.டி.இ
 

தமிழகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பால் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே பத்தாம் க்ளாஸ் மாணவர்கள் பரீட்சை எழுதாமல் ஆள் பாஸ் என அறிவிக்கப்பட்டதில் ,சுமாராக படிக்கும் மாணவர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றார். தொடர்ந்து பல்கலைக்கழக ,கல்லூரி மாணவர்கள் இறுதியாண்டு தவிர மற்ற அனைத்து அரியர் பாட தேர்வுகளிலும் ஆள் பாஸ் என்ற அறிவிப்பால் கல்லூரி மாணவர்களின் இதயத்திலும் இடம் பிடித்தார்.

இந்நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே ஏ.ஐ.சி.டி.இ – இன் விதியாக உள்ளது என்றும் விதியை மீறினால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் கேள்விக்குறியாகும் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தமிழக அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும் என்றும் சூரப்பாவின் கருத்தை ஏ.ஐ.சி.டி.இ கருத்தாக திணிக்கப்பார்ப்பது கண்டிக்கத்தக்கது என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கமளித்துள்ளார். அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் – தமிழக அரசின் முடிவில் மாற்றமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.