×

“என் சங்கருக்கு நீதி வேண்டும்” தந்தை விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் – கவுசல்யா பேட்டி

கடந்த 2015 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த சங்கர் என்பவர் கவுசல்யா என்ற பெண்ணை அவரின் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டே சங்கர் கவுசல்யாவின் உறவினர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தும், அவரது தாய்மாமன் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும் திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர் அவர்கள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து
 

கடந்த 2015 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த சங்கர் என்பவர் கவுசல்யா என்ற பெண்ணை அவரின் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டே சங்கர் கவுசல்யாவின் உறவினர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தும், அவரது தாய்மாமன் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும் திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பின்னர் அவர்கள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மரண தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த அனைத்து வழக்கின் தீர்ப்புகளும் இன்று வெளியானது. அதில், கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்தும் மற்ற 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அவர்கள் 3 பேரின் விடுதலை உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய கவுசல்யா, தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும் சின்னசாமி விடுதலை செய்யப்பட்டதும் மற்றவர்களுக்கு மரண தண்டனை குறைக்கப்பட்டதும் அதிர்ச்சியை அளிப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும், என் சங்கரின் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கூறிய அவர், இந்த தீர்ப்பு தொடர்பாக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்தால் அதனுடன் தன் வழக்கையும் இணைத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று தெரிவித்திருக்கிறார்.