×

கொடநாடு கொலை வழக்கு: 11 பேர் உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்

கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் 7 பேர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உதகை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இவ்வழக்கின் மறுவிசாரணை வரும் 11 தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ம் ஆண்டு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் இன்று ஆஜராக மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் குற்றம்
 

கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் 7 பேர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உதகை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இவ்வழக்கின் மறுவிசாரணை வரும் 11 தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ம் ஆண்டு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் இன்று ஆஜராக மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ், மனோஜ் சாமி, உதயகுமார் ஜித்தின்ஜாய், பிஜுன் குட்டி மற்றும் ஜம்சீர் அலி ஆகிய ஏழு பேர் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேலும் இவ்வழக்கின் மறு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து, வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 10 பேரும் 11ம் தேதி உதகை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.