×

வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு பிரபல தயாரிப்பாளர் நிதியுதவி!

கடந்த மாதம் இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர். அதே போலச் சீன ராணுவத்தில் 35 வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் கொடுத்தது. வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுள், தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர். இவரது குடும்பத்துக்குத் தமிழக அரசு
 

கடந்த மாதம் இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர். அதே போலச் சீன ராணுவத்தில் 35 வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் கொடுத்தது.

வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுள், தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர். இவரது குடும்பத்துக்குத் தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஹீரோ, ஐரா, விஸ்வாசம், தும்பா, குலேபகாவலி போன்ற பிரபல படங்களைத் தயாரித்த முன்னணி நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் உரிமையாளர் கோட்பாடி ஜெ ராஜேஷ் , உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும், பழனியின் மகள் மற்றும் மகனின் பள்ளி மற்றும் கல்லூரி கல்வி செலவுகளையும் தானே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.