×

கார் இன்சூரன்ஸ் கட்டாமல் பரப்புரை செய்யும் கமல் ஹாசன் : வைரலாகும் புகைப்படம்!!

காரின் இன்சூரன்ஸை புதுப்பிக்காமல் நடிகர் கமல் ஹாசன் தனது காரை பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசனும் தமிழகத்தில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இவர் தனது பரப்புரையில் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையாக டெண்டர் விடப்படும்.லஞ்ச ஒழிப்பு மேல் மட்டத்திலிருந்து தொடங்கப்படும்; இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கப்படும். தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியலை
 

காரின் இன்சூரன்ஸை புதுப்பிக்காமல் நடிகர் கமல் ஹாசன் தனது காரை பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசனும் தமிழகத்தில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இவர் தனது பரப்புரையில் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையாக டெண்டர் விடப்படும்.லஞ்ச ஒழிப்பு மேல் மட்டத்திலிருந்து தொடங்கப்படும்; இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கப்படும். தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியலை நடத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மையத்தின் ஆசை என்றெல்லாம் தனது கனவுகளை வாக்குகளாக அள்ளி தெறித்து வருகிறார். சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் இவர் நடத்தும் பரப்புரை கூட்டத்தில் அதிமுகவின் ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கமல் ஹாசன் பிரச்சாரம் செய்து வரும் Lexus காரின் இன்சூரன்ஸ் முடிந்தும் அவர் அந்த காரை விதியை மீறி பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது கடந்த மார்ச் 6ஆம் தேதியே காரின் இன்சூரன்ஸ் முடிந்துவிட்ட நிலையில் அதை மீண்டும் புதுப்பிக்காமல் கமல் ஹாசன் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவதாக சமூக வலைதளங்களில் ஆவணத்துடன் போட்டோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இதை கண்ட நெட்டிசன்கள், ஊழல் குறித்து பேசி வரும் நீங்களே சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறீர்களே என்று வசைபாடி வருகிறார்கள்.