×

கல்வியில் மேன்மை பெறவும், ஞாபக சக்தி பெறவும் கலைமகள் பூஜை!

கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி. சாரதா நவராத்திரியில் வரும் ஒன்பதாவது நாளை கலைவாணியான சரஸ்வதியை பிரதானமாக கருதி ஆராதனை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜையாகும். இந்த பூஜையை அனைவருமே மேற்கொள்ளலாம். ஒலியில் உறைந்திருப்பவளும், இசையில் கலந்திருப்பவளும், அறிவின் உறைவிடமாகவும், நினைவின் ஊற்றாகவும், சகல கல்விக்கும் சொந்தமானவளும், மொழி மற்றும் எழுத்தின் வடிவமானவளும், விஞ்ஞானம், கல்வி அறிவு போன்ற எண்ணற்ற கலைகளின் ஒருமித்த முழு வடிவமாக விளங்கும் கலைமகளுக்கு பத்மாக்ஷி,விமலா, ஞானமுத்ரா,
 

கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி. சாரதா நவராத்திரியில் வரும் ஒன்பதாவது நாளை கலைவாணியான சரஸ்வதியை பிரதானமாக கருதி ஆராதனை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜையாகும்.

இந்த பூஜையை அனைவருமே மேற்கொள்ளலாம். ஒலியில் உறைந்திருப்பவளும், இசையில் கலந்திருப்பவளும், அறிவின் உறைவிடமாகவும், நினைவின் ஊற்றாகவும், சகல கல்விக்கும் சொந்தமானவளும், மொழி மற்றும் எழுத்தின் வடிவமானவளும், விஞ்ஞானம், கல்வி அறிவு போன்ற எண்ணற்ற கலைகளின் ஒருமித்த முழு வடிவமாக விளங்கும் கலைமகளுக்கு பத்மாக்‌ஷி,விமலா, ஞானமுத்ரா, சாவித்ரி, சௌதாமினி, பிரம்மி, சுபத்ரா எனப்பல பெயர்கள் உள்ளன.

சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தங்குதடையின்றி வழங்குபவள் என்று பொருள். கல்வியை வற்றாத ஊற்றாகவும், ஞான ஒளியாகவும் அள்ளித்தருபவளே சரஸ்வதி. வேதங்கள் சரஸ்வதியை நதியாகக் குறிப்பிடுகின்றன. வேதம் என்பது அறிவு, அறிவின் ஆதாரம் மற்றும் அறிவின் கர்ப்பம் சரஸ்வதி என்று புராணங்கள் கூறுகின்றன.

அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள் என்கிறது கந்தபுராணம். சரஸ்வதியைப்பற்றி தமிழில் சரஸ்வதி அந்தாதி எனும் நூலைக் கம்பரும், சகலகலாவல்லி மாலை என்ற நூலைக் குமரகுருபரரும் இயற்றியுள்ளார்கள்.

சரஸ்வதியை வெண்ணிற மலர்கள் கொண்டு வழிபடுவது விசேஷம். சரஸ்வதிக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்து வழிபடலாம். அன்னைக்கு பால் பாயசம், தேங்காய், பழம் முதலியன நைவேத்தியமாக செய்யலாம். புத்தகங்கள், பேனாக்கள் மற்றும் கல்வி தொடர்பான பொருள்களை வைத்து கல்விக் கடவுள் சரஸ்வதியை வழிபடுவது வழக்கம். நாளை சரஸ்வதி படத்தையோ, விக்ரகத்தையோ வைத்து அதை மலர்களாலும் சந்தன குங்குமங்களாலும் அலங்கரித்து வழிபாடு செய்வர். மேலும், கல்விக்குரிய பொருள்களையும் நாளை பூஜையில் வைப்பர். கல்வியாண்டில் அம்மனுக்கு முன்பாகக் கருவிகளைக் கொட்டி வைத்து சிறு குழந்தைகள் அவற்றில் எதை எடுக்கிறார்களோ அதில் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அன்னையை வழிபடும் போது ஞாபக சக்தி பெற சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் பாராயணம் செய்து வழிபடவும்.

அவிச்ராந்தம் பத்யுர் – குணகண – ககதாம்ரேடன ஜபாஜபாபுஷபச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸாயதக்ராஸீநாயா; ஸ்படிகத்ருஷ தச்சச்சவி – மயீஸரஸ்வத்ய மூர்த்தி; பரிணமதி மாணிக்யவபுஷா –
அர்த்தம் அம்பிகையே, உன்னுடைய சிறந்த நாவினால் இடைவிடமால் உனது கணவனாகிய சிவபெருமானின் பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதே ஜபித்து, அதனால் அது செம்பருத்திப்பூவைப் போல சிவந்து சிறப்புடன் விளங்குகிறது. அந்நாவின் நுனியில் குடியிருக்கும் சரஸ்வதியினுடைய ஸ்படிகம் போன்ற தெளிவான வெண்மை வடிவமானது, உன் நா நிறத்தால், மாணிக்கம் போல் சிவந்த வடிவமாக மாறுகிறது. உன் அம்சமான அந்த சரஸ்வதியை வணங்குகிறேன்.

சரஸ்வதி பூஜையான நாளையிலிருந்து (25.10.2020) 108முறை 18 நாட்கள் பூஜையறையில் வடக்கு முகமாக அமர்ந்து இந்த துதியை பாராயணம் செய்ய ஞாபக சக்தி அதிகரித்து படிப்பில் சிறந்து விளங்குலாம். முடிந்தவர்கள் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்து சாதம், பாயசம் மற்றும் ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, ஜாதிக்காய் போன்றவற்றை சேர்த்து செய்த தாம்பூலத்தையும் நிவேதம் செய்து வழிபட்டால், கலைமகளின் திருவருள் சித்திக்கும்.

-வித்யா ராஜா