×

கனடாவில் ஹாட்ரிக் அடித்த ஜஸ்டின் ட்ரூடோ… ஆனால் இது தோல்விகரமான வெற்றி தோல்வி தான்!

சர்வதேச அளவில் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு பரிட்சையமான உலக முகம். கருத்து சொல்ல வேண்டுமென்றால் கூட இவர் போட்டோவை போட்டு கருத்து சொல்பவர்களே தமிழ்நாட்டில் அதிகம். ஆனால் அதற்கு நேர்மாறாக கனடா மக்களிடம் அவரின் புகழ் மங்கி கிடக்கிறது. ஊழல் குற்றச்சாட்டு, சொன்னதை நிறைவேற்றமல் இருப்பது என நிறைய கரும்புள்ளிகள் ட்ரூடோ மீது இருந்தன. மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2015ஆம் ஆண்டு கனடாவின்
 

சர்வதேச அளவில் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு பரிட்சையமான உலக முகம். கருத்து சொல்ல வேண்டுமென்றால் கூட இவர் போட்டோவை போட்டு கருத்து சொல்பவர்களே தமிழ்நாட்டில் அதிகம். ஆனால் அதற்கு நேர்மாறாக கனடா மக்களிடம் அவரின் புகழ் மங்கி கிடக்கிறது. ஊழல் குற்றச்சாட்டு, சொன்னதை நிறைவேற்றமல் இருப்பது என நிறைய கரும்புள்ளிகள் ட்ரூடோ மீது இருந்தன. மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2015ஆம் ஆண்டு கனடாவின் பிரதமரானார் ட்ரூடோ.

வெற்றிக்கரமாக நான்கு ஆண்கள் பதவிக்காலத்தை முடித்தார். இதன்பின் 2019ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதில் அவர் சார்ந்த லிபரல் கட்சி வெற்றிபெற்ற போதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எப்போது ஆட்சி கவிழும் என்றே தெரியாமல் கடந்த இரு வருடங்களாக ஆட்சி நடத்திவந்தார். இருப்பினும் கொரோனாவை எதிர்த்து துரிதமாகச் செயல்பட்டு கட்டுப்படுத்தினார். இதில் மக்களிடம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதை வைத்து விரைவில் தேர்தல் நடத்தி பெரும்பான்மை ஆட்சியமைக்க விரும்பினார்.

அதற்காக ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் முன்பே நாடாளுமன்றத்தைக் கலைக்கப்பட்டது. செப்டம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. லிபரல் கட்சி வேட்பாளராக ட்ரூடோ நிற்க, அவரை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியான கன்சரவேட்டிவ் வேட்பாளராக எரின் ஓ டூல் நிறுத்தப்பட்டார். இருவருக்கு டஃப் பைட் நிலவியது. இதனிடையே சொன்னபடியே நேற்று தேர்தல் அமைதியாக நடந்துமுடிந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மொத்தம் 338 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் வெற்றிக்கு தேவை 170 இடங்கள்.

ஆனால் தற்போதைய நிலவரப்படி ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதுதவிர பிளாக் குபெகோயிஸ் 32 இடங்களிலும், இடதுசாரி புதிய ஜனநாயக கட்சி 28 இடங்களிலும் மெஜாரிட்டியில் உள்ளன. எப்படி பார்த்தாலும் ட்ரூடோ எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. அவரின் நோக்கமும் நிறைவேறவில்லை. மீண்டும் கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு ஆட்சியைவே ட்ரூடோவால் நடத்த முடியும். குறைந்த இடங்களில் வெற்றிபெறவிருக்கும் கட்சிகளுடன் இணைந்தே ஆட்சி நடத்த முடியும். எனினும் அவரே மூன்றாம் முறையாக பிரதமராவது உறுதியாவிட்டது. இது ஒரு தோல்விகரமான வெற்றி தான்.