×

எதன் அடிப்படையில் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது? நீதிபதிகள் கேள்வி!

கொரோனா நோயாளிகளுக்கு எதன் அடிப்படையில் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது என மதுரை உயர்நீதி மன்றக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கொரோனாவுக்கான மருந்தை கண்டு பிடிக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் மனிதர்களுக்கு பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில், சித்த மருத்துவத்தால் கொரோனா குணமடைவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சித்த மருத்துவர் சுப்ரமணியன் கண்டுபிடித்த ‘இம்ப்ரோ’ என்னும் மருந்தை பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
 

கொரோனா நோயாளிகளுக்கு எதன் அடிப்படையில் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது என மதுரை உயர்நீதி மன்றக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கொரோனாவுக்கான மருந்தை கண்டு பிடிக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் மனிதர்களுக்கு பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில், சித்த மருத்துவத்தால் கொரோனா குணமடைவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சித்த மருத்துவர் சுப்ரமணியன் கண்டுபிடித்த ‘இம்ப்ரோ’ என்னும் மருந்தை பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் புகழேந்தி, கிருபாகரன் அமர்வு, எதன் அடிப்படையில் நோயாளிகளுக்கு கபசுர குடிநீர் வழங்குகிறீர்கள்? கொரோனா மருந்துக்கு சித்த மருத்துவத்தை ஊக்குவிக்கலாமே? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, கபசுர குடிநீர் வழங்கப்படுவதற்கு முன்னர் என்ன ஆய்வு நடத்தப்பட்டது? எத்தனை பேர் இதுவரை அதனால் குணமடைந்தனர்? என சரமாரியாக கேள்விகளை முன்வைத்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக மத்திய அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.