×

“சசிகலாவுக்கு பயந்து ஜெ. சமாதியை மூடிய எடப்பாடி” ? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

சசிகலா வருகையால் தான் ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட அரசு தடை விதித்துள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் ரூ.80கோடி செலவில் பீனிக்ஸ் பறவை போல் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா சென்னை அப்பலோ மருத்துவமனையில் இறந்தார். இதையடுத்து அவரது சமாதியில் நினைவிடம் கட்டும் பணி கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது.
 

சசிகலா வருகையால் தான் ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட அரசு தடை விதித்துள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் ரூ.80கோடி செலவில் பீனிக்ஸ் பறவை போல் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா சென்னை அப்பலோ மருத்துவமனையில் இறந்தார். இதையடுத்து அவரது சமாதியில் நினைவிடம் கட்டும் பணி கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் வடிவமைக்கப்பட்டு இந்த நினைவிடத்தை தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த 27 ஆம் தேதி திறந்துவைத்தார்.

இந்த சூழலில் பொதுப்பணித்துறை ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களை பொதுமக்கள் பார்க்க தடைவிதித்துள்ளது. அதாவது அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா போன்ற இடங்களில் பணிகள் இன்னும் முழுமையடையாததால் தற்காலிகமாக நினைவிடத்தை பார்க்க தடை விதிப்பதாக கூறியுள்ளது.

இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலையாகியுள்ள சசிகலா இன்னும் ஓரிரு நாட்களில் பெங்களூருவிலிருந்து தமிழகம் திரும்பவுள்ளார். அவர் சென்னை வந்ததும் முதலில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதாக இருந்தது. இதனால் அதற்கு இடமளிக்க கூடாது என்றே எடப்பாடி அரசு நினைவிடத்தை பார்வையிட தடைவித்துள்ளது என பலரும் கருத்து கூறி வருகின்றனர். இதுகுறித்து சமூகவலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.