×

ஜல்லிக்கட்டு போட்டி : திருப்பரங்குன்ற உதவி ஆணையர் எச்சரிக்கை!

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என திருப்பரங்குன்ற உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் சிலர் ஜல்லிக்கட்டு பயிற்சி நடத்தி அதில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக திருப்பரங்குன்ற சரக உதவி ஆணையர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்த போது,
 

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என திருப்பரங்குன்ற உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் சிலர் ஜல்லிக்கட்டு பயிற்சி நடத்தி அதில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக திருப்பரங்குன்ற சரக உதவி ஆணையர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தேதி அறிவித்த பிறகு காவல்துறையின் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு பயிற்சியில் ஈடுபட வேண்டும். அவனியாபுரம் பகுதிகளில் வார இறுதி நாட்களில் பொது இடங்களில் ஜல்லிக்கட்டு காளைகளும் , மாடுபிடி வீரர்களும் பயிற்சி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செயல்பட்டால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜல்லிக்கட்டு காளைகளை பறிமுதல் செய்வார்கள் என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக தெருத்தெருவாக அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் ,மாடுபிடி வீரர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.