×

திமுக எம்எல்ஏ அன்பழகன் மறைவு : தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இரங்கல்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை 8.05 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 62. மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2001 இல் தி.நகரிலும் 2011 மற்றும் 16 இல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார். 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த இவர் கொரோனா நேரத்திலும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார். ஜெ.அன்பழகன் மறைவிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழக முதல்வர்
 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை 8.05 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 62.

மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2001 இல் தி.நகரிலும் 2011 மற்றும் 16 இல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார். 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த இவர் கொரோனா நேரத்திலும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார்.

ஜெ.அன்பழகன் மறைவிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்பி கனிமொழி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தலைவர் எல். முருகன் தனது டிவிட்டர் பக்கத்தில், ” திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தாருக்கு அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.