×

இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவிய நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், கடலூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களில் கனமழைக்கு வாய்ப்புஉள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் தமிழகம், வாடா கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான இடங்களில்
 

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவிய நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், கடலூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களில் கனமழைக்கு வாய்ப்புஉள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் தமிழகம், வாடா கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 8 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளது என வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 41 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.