×

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக… 43 கிராமங்களை தத்தெடுத்த ஈஷா!

தமிழகத்தில் கொரோனவைரஸ் இரண்டாம் நிலை தீவிரமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பல தனியார் தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், கொரனோ நிவாரணப் பணிகளுக்காக ஈஷா அறக்கட்டளை 43 கிராமங்களை தத்தெடுத்து உள்ளது. ஈஷா அவுட்ரீச் அமைப்பு கோவையில் உள்ள 43 கிராமங்களில் நிவாரண
 

தமிழகத்தில் கொரோனவைரஸ் இரண்டாம் நிலை தீவிரமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பல தனியார் தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், கொரனோ நிவாரணப் பணிகளுக்காக ஈஷா அறக்கட்டளை 43 கிராமங்களை தத்தெடுத்து உள்ளது.

ஈஷா அவுட்ரீச் அமைப்பு கோவையில் உள்ள 43 கிராமங்களில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாக 17 பஞ்சாயத்துகளில் உள்ள 2 லட்சம் கிராம மக்கள் பயன் பெற்றுள்ளனர். ஈஷா சார்பில் பிரம்மசாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் இணைந்து பொது மக்களுக்கு மட்டுமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கும் உதவிகளை செய்து வருகிறார்கள்.

தினமும்1.2 லட்சம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்குவது, ஆக்சிஜன் அளவை அதிகரிக்க சிம்மக்ரியா மற்றும் சாஷ்டாங்கா உடற்பயிற்சிகள் கற்றுக் கொடுப்பது, ஒலிப்பெருக்கிகளுடன் கூடிய ஆட்டோக்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, 2500 முன்களப்பணியாளர்களுக்கு மாஸ்க் மற்றும் சானிடைசர் கொடுப்பது, அரசு மருத்துவமனைகளில் கிருமிநாசினி தெளிக்க உதவுவது போன்ற நடவடிக்கைகளை களத்தில் இறங்கி ஈஷா அறக்கட்டளை செய்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல், நோயாளிகளை கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வது கட்டுப்பாடு பகுதிகளில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வது போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஈஷா அறக்கட்டளை கொரோனா நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.