×

தமிழ்நாட்டில் தலைதூக்குகிறதா துப்பாக்கி கலாச்சாரம்? – உயர் நீதிமன்றம் வேதனை

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் நிலத் தகராறு தொடர்பாக கள்ளத் துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் துப்பாக்கி காட்டி கொள்ளையடித்த ஒருவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தமிழகத்தில்
 

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் நிலத் தகராறு தொடர்பாக கள்ளத் துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் துப்பாக்கி காட்டி கொள்ளையடித்த ஒருவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதிகள், “தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருகிறது. குண்டர்கள், அரசியல்வாதிகள், குற்றவாளிகள் கூடத் துப்பாக்கி உரிமம் வைத்துள்ளனர்.


பீகார், ஜார்கண்டில் இருந்து கள்ளத் துப்பாக்கிகள் தமிழகத்துக்கு அதிக அளவில் கடத்திக் கொண்டு வரப்படுகிறது. இதை தடுத்து தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்” என்றனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி உள்ளிட்டோருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அதுபற்றி இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.