×

இந்தியாவில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், நாளை முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. ஆனால் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதாவது, கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் பல தளர்வுகள் செய்யப்பட்டன. அதன் படி தமிழகத்திலும் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி தினமும் 25 உள்நாட்டு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச விமானங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை
 

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், நாளை முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. ஆனால் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதாவது, கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் பல தளர்வுகள் செய்யப்பட்டன. அதன் படி தமிழகத்திலும் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி தினமும் 25 உள்நாட்டு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச விமானங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இந்தியாவில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை அழைத்து வர மட்டுமே வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.