×

சில்லரை விலை பணவீக்கம் குறைந்தது.. தொழில்துறை உற்பத்தியில் வளர்ச்சி.. மத்திய அமைச்சகம் தகவல்

கடந்த ஜூலை மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது, கடந்த ஜூனில் தொழில்துறை உற்பத்தியில் 13.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தை நேற்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டது. கடந்த ஜூலை மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.59 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் இது ரிசர்வ் வங்கி
 

கடந்த ஜூலை மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது, கடந்த ஜூனில் தொழில்துறை உற்பத்தியில் 13.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தை நேற்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டது. கடந்த ஜூலை மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.59 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் இது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள சில்லரை விலை பணவீக்கத்துக்கான அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 6.26 சதவீதமாக உயர்ந்து இருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி

கடந்த ஜூன் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி கடந்த ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 13.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்லும் 2020 ஜூன் மாதத்தில் லாக்டவுன் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டதால் அந்த மாத்தில் தொழில்துறை உற்பத்தி 16.6 சதவீதம் வீழ்ச்சி கண்டு இருந்தது. இந்த ஆண்டு மே மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 29.3 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

தொழில்துறை

கடந்த ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஜூன் மாத தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்கள் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு வெளிவந்தது. எனவே இதன் தாக்கம் இன்றைய இந்திய பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.