×

சில்லரை விலை பணவீக்கம் குறைந்தது.. தொழில்துறை உற்பத்தியில் முன்னேற்றம்.. மத்திய அரசு தகவல்

கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 6.26 சதவீதமாக குறைந்துள்ளது, கடந்த மே மாதத்தில் தொழில்துறை உற்பத்தியில் 29.27 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய புள்ளியியல் அமலாக்கத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தை நேற்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டது. கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 6.26 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து இரண்டாவது மாதமாக கடந்த ஜூனில் சில்லரை
 

கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 6.26 சதவீதமாக குறைந்துள்ளது, கடந்த மே மாதத்தில் தொழில்துறை உற்பத்தியில் 29.27 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய புள்ளியியல் அமலாக்கத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தை நேற்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டது. கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 6.26 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து இரண்டாவது மாதமாக கடந்த ஜூனில் சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 6.30 சதவீதமாக உயர்ந்து இருந்தது.

தொழில்துறை

கடந்த மே மாதத்தில் தொழில்துறை உற்பத்தி கடந்த ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 29.27 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்லும் 2020 மே மாதத்தில் லாக்டவுன் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டதால் அந்த மாத்தில் தொழில்துறை உற்பத்தி 34.7 சதவீதம் வீழ்ச்சி கண்டு இருந்தது. இதனால் கடந்த மே மாதத்தில் தொழில்துறை உற்பத்தி பெரிய அளவில் வளர்ச்சி கண்டு போல் தெரிகிறது.

பங்கு வர்த்தகம்

கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம், கடந்த மே மாதத்தில் தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்கள் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு வெளிவந்தது. எனவே இதன் தாக்கம் தாக்கம் இன்றைய இந்திய பங்குச் சந்தைகளில் இன்று எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.