×

நேற்று ஒரேநாளில் இத்தனை கோடிக்கு மது விற்பனையா..!

தமிழகத்தில் முழு ஊரடங்கையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.252.48 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இரவு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுப் பிரியர்கள் நேற்று மதுபாட்டில்களை வாங்கி குவித்துள்ளனர் . நேற்று காலை 10 மணி முதல் மதுக்கடைகளில் குடிமகன்கள் குவிய தொடங்கி நிலையில் மதுக்கடை 12 மணிக்கு திறந்ததும் அடித்துப்பிடித்து மதுபாட்டில்களை
 

தமிழகத்தில் முழு ஊரடங்கையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.252.48 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இரவு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுப் பிரியர்கள் நேற்று மதுபாட்டில்களை வாங்கி குவித்துள்ளனர் . நேற்று காலை 10 மணி முதல் மதுக்கடைகளில் குடிமகன்கள் குவிய தொடங்கி நிலையில் மதுக்கடை 12 மணிக்கு திறந்ததும் அடித்துப்பிடித்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் பல இடங்களில் தடுப்பு நடவடிக்கை என்பது காற்றில் பறந்தது. வழக்கமாக தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறைக் கடைகளை பொறுத்தவரையில் மட்டும் தினமும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனை ஆகி வருகின்றன. இதனால் தமிழக அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. இதை கருத்தில் கொண்டே டாஸ்மாக்க்கில் அரசு அதிகளவில் கட்டுப்பாடுகளை விதிப்பது இல்லை.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 252.48 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மதுவிற்பனை செய்யப்ட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 58.37 கோடிக்கும், மதுரையில் 49.43 கோடிக்கும், கோவையில் 48.32 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. திருச்சியில் 48.57 கோடிக்கும், சேலத்தில் 47.79 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளன.