×

சிறுமி மித்ரா மருந்துக்கான இறக்குமதி வரி நீக்கம் : வானதி சீனிவாசன் கோரிக்கை!!

சிறுமி மித்ரா மருந்துக்கான இறக்குமதி வரி நீக்கக்கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த, 23 மாத பெண் குழந்தை மித்ரா,Autosomal Recessive Spinal Muscular Atropy (SMA)) என்ற, அரிய வகை மரபு அணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அக்குழந்தையால் நடக்க முடியாது. உரிய மருத்துவம் அளிக்க முடியாத நிலையில், உயிருக்கும் ஆபத்து வரும் சூழலுக்கு அக்குழந்தை தள்ளப்பட்டது . தற்போது குழந்தை மித்ரா சிகிச்சைக்கு தேவையான
 

சிறுமி மித்ரா மருந்துக்கான இறக்குமதி வரி நீக்கக்கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த, 23 மாத பெண் குழந்தை மித்ரா,Autosomal Recessive Spinal Muscular Atropy (SMA)) என்ற, அரிய வகை மரபு அணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அக்குழந்தையால் நடக்க முடியாது. உரிய மருத்துவம் அளிக்க முடியாத நிலையில், உயிருக்கும் ஆபத்து வரும் சூழலுக்கு அக்குழந்தை தள்ளப்பட்டது . தற்போது  குழந்தை மித்ரா சிகிச்சைக்கு தேவையான ரூ.16 கோடி தற்போது கிடைத்துள்ளது. ஆனாலும் அந்த மருந்தை இறக்குமதி செய்ய 6 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. zolgensma என்கிற ஊசி மருந்து இறக்குமதி செய்யும்போது, அதில் இறக்குமதி வரியை ரத்து செய்யுமாறு பிரதமருக்கு , வைகோ உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிறுமி மித்ராவிற்கான மருத்துவ சிகிச்சை மருந்துக்கான இறக்குமதி வரி நீக்கத்திற்காக இன்று காலை மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக பேசினேன் . உதவுவதாக தாயுள்ளத்துடன் பரிவோடு கூறியுள்ளார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக zolgensma என்கிற ஊசி மருந்து இறக்குமதி செய்யும்போது, அதில் இறக்குமதி வரியை ரத்து செய்யுமாறு பிரதமருக்கு ஏற்கனவே வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.