×

நகராமல் நிற்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : மிக கனமழைக்கு வாய்ப்பு!

ராமநாதபுரத்தின் தென்மேற்கு திசையில் 40 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. பாம்பனில் இருந்து 70 கி.மீ., கன்னியாகுமரியில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது புரெவி புயல் ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல மணி நேரம் இருப்பதால் மிக
 

ராமநாதபுரத்தின் தென்மேற்கு திசையில் 40 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. பாம்பனில் இருந்து 70 கி.மீ., கன்னியாகுமரியில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது புரெவி புயல் ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல மணி நேரம் இருப்பதால் மிக கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கன மழை தொடரும் எனவும் அறிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது.