×

ரூ.50 லட்சம் இழப்பீடு தரக்கோரி இளையராஜா வழக்கு! பின்னணி என்ன?

பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து வெளியேற்றியதற்காக இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளரான எல்.வி.பிரசாத்தின் அனுமதியுடன் இளையராஜா அங்கு தனது இசை பணியை நடத்தி வந்தார். 1976-ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படம் தொடங்கி தற்போது வரை இளையராஜா, அந்த ஸ்டூடியோவைதான் பயன்படுத்தி வந்தார். அதே சமயம் இளையராஜா இதற்கு முறையாக வாடகை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த சூழலில் தான் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ம்தேதி
 

பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து வெளியேற்றியதற்காக இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளரான எல்.வி.பிரசாத்தின் அனுமதியுடன் இளையராஜா அங்கு தனது இசை பணியை நடத்தி வந்தார்.   1976-ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படம் தொடங்கி தற்போது வரை இளையராஜா,  அந்த ஸ்டூடியோவைதான் பயன்படுத்தி வந்தார். அதே சமயம் இளையராஜா இதற்கு முறையாக வாடகை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த சூழலில் தான் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ம்தேதி முதல்  பிரசாத் ஸ்டூடியோ ஊழியர்கள் இசையமைப்பாளர் இளையராஜாக்கு தொடர்ந்து இடையூறு கொடுத்து வந்துள்ளனர்.

அவரை ஸ்டூடியோவை விட்டு வெளியேறுமாறும் கூறி வந்தனர். இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.இந்த  விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ இடையேயான விவகாரத்தைச் சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி உத்தரவிட்டது. 

இந்நிலையில் வெளியேற்றுவதற்காக பிரசாத் ஸ்டூடியோ ரூ.50 லட்சம் இழப்பீடு தர கோரி இசையமைப்பாளர் இளையராஜா மனுதாக்கல் செய்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் இழப்பீடு தர கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தனக்கு சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் வெளியேற்றியது நியாயமற்றது என்றும் தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் பிரசாத் ஸ்டுடியோ தலையிட தடை விதிக்கவும் இளையராஜா தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.