×

செம்மரக்கடத்தல் வழக்கில் இளவரசியின் சம்பந்தி கைது!

சசிகலா அண்ணி இளவரசியின் சம்பந்தி செம்மரக்கடத்தல் வழக்கில் சென்னையில் கைதாகியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ளவர் சசிகலாவின் அண்ணி இளவரசி. கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சசிகலாவுடன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் சம்பந்தி பாஸ்கர் செம்மரக்கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பாஸ்கர் போலீசில் சிக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் செம்மரக்கடத்தல் வழக்கில் சொத்து குவிப்பு வழக்கில்
 

சசிகலா அண்ணி இளவரசியின் சம்பந்தி செம்மரக்கடத்தல் வழக்கில் சென்னையில் கைதாகியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ளவர் சசிகலாவின் அண்ணி இளவரசி. கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சசிகலாவுடன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் சம்பந்தி பாஸ்கர் செம்மரக்கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பாஸ்கர் போலீசில் சிக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் செம்மரக்கடத்தல் வழக்கில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தியை ஆந்திர போலீஸ் கைது செய்தது. சென்னை அண்ணாநகரில் உள்ள பாஸ்கர் வீட்டுக்கு வந்த ஆந்திர போலீசார் அவரது வீட்டை சுற்றிவளைத்து கைது செய்தனர். 20ற்கும் மேற்பட்ட செம்மரக்கட்டைகளை கடத்தியதாக பாஸ்கரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட பாஸ்கரின் அண்ணன், சிட்டி ராஜா மூச்சு திணறல் ஏற்பட்டு சிறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.