×

இதை செய்தால் உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் தரிசனம் செய்த பலன் கிட்டும்!

மும்மூர்த்திகளில் ஒருவர் சிவபெருமான். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கியவர் சிவன். இந்த ஐந்து பணிகளில் காத்தல் தொழிலை செய்து அண்டசராசரங்களுக்கு படியளந்து வாழ வைக்கிறார்.சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் காட்சியளிக்கிறார். சிவபெருமானுக்கு உகந்ததாக சோமவார விரதம், உமா மகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம்,சிவராத்திரி விரதம்,
 

மும்மூர்த்திகளில் ஒருவர் சிவபெருமான். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கியவர் சிவன். இந்த ஐந்து பணிகளில் காத்தல் தொழிலை செய்து அண்டசராசரங்களுக்கு படியளந்து வாழ வைக்கிறார்.சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் காட்சியளிக்கிறார்.

சிவபெருமானுக்கு உகந்ததாக சோமவார விரதம், உமா மகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம்,சிவராத்திரி விரதம், கல்யாண விரதம் , பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதாரகௌரி விரதம் ஆகியவை கடைப்பிடிக்கப்படுகிறது. சிவபெருமான் பூஜைக்கு உகந்ததாக வில்வ மலர்கள் கருதப்படுகிறது.

ஒரு வில்வ மலரானது ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு சமமானது என்று சொல்லப்படுகிறது. ஒரு வில்வ மரத்தை வீட்டுல வளர்த்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்குமாம். அதேபோல் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களில் தரிசனம் செய்த பலனும், கங்கை உள்ளிட்ட புனித நீர்களில் நீராடிய பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அத்துடன் வில்வத்துக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. இது வில்வத்துக்கே உள்ள தனி சிறப்பாகும். வில்வம் உலர்ந்து போனாலும், எத்தனை நாட்களானாலும் பூஜைக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இது போன்று மற்ற பூக்களையோ, இலைகளையோ பயன்படுத்த கூடாது.