×

என் உடம்பிலுள்ள 15 மீட்டர் தோல் 7 தொழுநோயாளிகளுக்கு செருப்பாகப் பயன்படும் என்றால்…கமல் உருக்கம்

ஒவ்வொரு ஆண்டும் இருதயம், நுரையீரல், மாரடைப்பு, புற்றுநோய், சர்க்கரை நோய்களால் 58 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 1.75 லட்சம் பேருக்கு கிட்னி தேவைப்படுகிறது என்றால், 5,000 பேருக்கு மட்டுமே இந்த தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதேபோல், 1,000 பேருக்கு மட்டுமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், சுமார் 50,000 பேர் கல்லீரல் நோயால் உயிரிழக்கின்றனர். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்து உயிரிழக்கும் இவர்களைக் காப்பாற்ற உடல் தானம் கண் தானம் செய்ய
 

வ்வொரு ஆண்டும் இருதயம், நுரையீரல், மாரடைப்பு, புற்றுநோய், சர்க்கரை நோய்களால் 58 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 1.75 லட்சம் பேருக்கு கிட்னி தேவைப்படுகிறது என்றால், 5,000 பேருக்கு மட்டுமே இந்த தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதேபோல், 1,000 பேருக்கு மட்டுமே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், சுமார் 50,000 பேர் கல்லீரல் நோயால் உயிரிழக்கின்றனர். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்து உயிரிழக்கும் இவர்களைக் காப்பாற்ற உடல் தானம் கண் தானம் செய்ய அனைவரும் முன் வரவேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

உடல்தானம் செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வு மட்டுமின்றி, சரியான நேரத்தில் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்பது தான் முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதனால்தன் மனம் இருந்தாலும் சரியான நேரத்தில் உடல் உறுப்புகளை பாதுகாத்து அளித்தால் மட்டுமே பயனளிக்கும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தை வலியுறுத்தியே ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ம் தேதி சர்வதேச உடல் உறுப்பு தான தினம் #WorldOrganDonorDay #OrganDonationDayஅனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவிலே முதன் முதலாக, தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற, முன்னோடி அமைப்பை, 12.12.2014 ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். அதன் பயனாக, உடல் உறுப்பு மாற்றும் அறுவை சிகிச்சையில், முன்னோடி மாநிலமாக, தமிழகம் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில், இதுவரை, 1,382 கொடையாளர்களிடம் இருந்து, 8,163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டிருக்கின்றன.

உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தொடர்ந்து, ஐந்தாவது முறையாக, தமிழகம் முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது. மூளைத்தண்டு சாவு அடைந்தவரின், உறுப்புகளை தானம் செய்தால், எட்டு நபர்களுக்கு வாழ்வளிக்க முடியும். எனவே, உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை, மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்று கடந்த ஆட்சியின் போது எடப்பாடி பழனிச்சாமியும் கேட்டுக்கொண்டிருந்தார்.

தமிழ் சினிமாவில் முதன் முறையாக உடல் தானம் செய்தவர் நடிகர் கமல்ஹாசன். தன்னைப் போலவே கண் தானம் மற்றும் உடல் தானம் செய்பவர்களை வாழ்த்தியும், ஊக்குவித்தும் வருகிறார் அவர். அப்படித்தான் பத்திரிகையாளரும், நடிகருமான ‘கயல்’ தேவராஜ் உடல் தானம் செய்தபோது, அதை அறிந்து பாராட்டிய கமல்ஹாசன், ’’என் உடம்பிலுள்ள 15 மீட்டர் தோல், 7 தொழுநோயாளிகளுக்கு செருப்பாகப் பயன்படும் என்றால், அதுவே என் சொர்க்கம்’’என்று தேவராஜிடம் தெரிவித்திருக்கிறார். #சர்வதேசஉடல்உறுப்புதானதினம் முன்னிட்டு இதை தேவராஜ் நினைவுகூர்ந்திருக்கிறார்.