×

பாஜகவில் இணைகிறேன் : திமுகவிலிருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி பரபரப்பு பேட்டி!

திமுகவில் 1989-1991 மற்றும் 2006-2011 வரை துணை சபாநாயகராக பதவி வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை எம்பியாக இருந்த இவர் தற்போது திமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தார். மாநிலங்களவை சீட் தராததால் கட்சி தலைமையுடன் இருந்த கருத்துவேறுபாடு, தனது சொந்த ஊர்காரரும் தமிழக பாஜக தலைவருமான எல். முருகனுடன் கமலாலயத்தில் சந்திப்பு, திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி என பல விவாகரங்களால் வி.பி.துரைசாமியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் அந்தியூர் செல்வராஜ் திமுக துணை பொதுச்
 

திமுகவில் 1989-1991 மற்றும் 2006-2011 வரை துணை சபாநாயகராக பதவி வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை எம்பியாக இருந்த இவர் தற்போது திமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தார். மாநிலங்களவை சீட் தராததால் கட்சி தலைமையுடன் இருந்த கருத்துவேறுபாடு, தனது சொந்த ஊர்காரரும் தமிழக பாஜக தலைவருமான எல். முருகனுடன் கமலாலயத்தில் சந்திப்பு, திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி என பல விவாகரங்களால் வி.பி.துரைசாமியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் அந்தியூர் செல்வராஜ் திமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி இன்று பாஜகவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். கருணாநிதி அழைத்தார் என்பதால் 2001 ஆம் ஆண்டு மீண்டும் திமுகவிற்கு வந்தேன் என்றும் திமுகவில் சேர்ந்த என்னை 2006 இல் துணை சபாநாயகர் ஆக்கி அழகுபார்த்தார் கருணாநிதி என்றும் அவர் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் அதில், “இன்று காலை பாஜகவில் இணைகிறேன். திமுகவின் அடிமட்ட தொண்டன் பொறுப்பில் இருந்து என்னை நீக்குமாறு தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்றும் அவர் கூறியுள்ளார். வி.பி.துரைசாமியின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.