×

வரதட்சணை கேட்டு மனைவி மீது மண்ணெண்ணை ஊற்றி எரிக்க முயன்ற கணவர் கைது!

மதுரையில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை மண்ணெண்ணை ஊற்றி எரிக்க முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தமிழகத்தில் வரதட்சணை கொடுமைக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வரும் நிலையில் அதனை 10 ஆண்டாக உயர்த்த வேண்டும் என சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். பெண்களை பின்தொடருவோருக்கான தண்டனையை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டாக உயர்த்த வேண்டும் என்றும் 18
 

மதுரையில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை மண்ணெண்ணை ஊற்றி எரிக்க முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் வரதட்சணை கொடுமைக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வரும் நிலையில் அதனை 10 ஆண்டாக உயர்த்த வேண்டும் என சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். பெண்களை பின்தொடருவோருக்கான தண்டனையை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டாக உயர்த்த வேண்டும் என்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களை பாலியல் தொழிலுக்கு வழிபடுத்தினால் ஆயுள்தண்டனை தரவும் பரிந்துரைத்துள்ளார்.

இந்நிலையில் மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி சுரேஷ். இவருக்கும் கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கற்பகவல்லி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் சுமூகமாக வாழ்ந்துவந்த நிலையில் வரதட்சணை கேட்டு ஹரி சுரேஷ் கற்பகவல்லி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் ஹரி சுரேஷ் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.