×

தமிழகத்திற்குள் ரயில் பயணம் செய்ய எவ்வாறு இ-பாஸ் பெறுவது?

தமிழகத்திற்குள் ரயில் பயணம் செய்ய இ-பாஸ் பெறுவது எப்படி என்று இந்த கட்டுரையில் காணலாம். மார்ச் மாதத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து நாடு முழுவதும் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. தினமும் நாட்டில் 200 ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மதுரை-விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில், கோவை-மயிலாடுதுறை, கோவை-காட்பாடி ஆகிய மார்க்கங்களில் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான
 

தமிழகத்திற்குள் ரயில் பயணம் செய்ய இ-பாஸ் பெறுவது எப்படி என்று இந்த கட்டுரையில் காணலாம்.

மார்ச் மாதத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து நாடு முழுவதும் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. தினமும் நாட்டில் 200 ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மதுரை-விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில், கோவை-மயிலாடுதுறை, கோவை-காட்பாடி ஆகிய மார்க்கங்களில் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆனால் தமிழகத்திற்குள் ரயிலில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் ஆகும். சமீபத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு குறித்து அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் வழிகாட்டுதல்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ ரயில் மூலம் செல்ல விரும்புபவர்கள் தமிழக அரசிடம் ஆன்-லைன் மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து ‘இ-பாஸ்‘ பெற வேண்டும். இதை tnepass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் இ-பாஸ் பெற விண்ணப்பம் செய்யும்போது ரயில் டிக்கெட்டில் உள்ள பி.என்.ஆர் நம்பர் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் எளிதில் ரயில் பயணம் செய்வதற்கான இ-பாஸை பெற்று விடலாம்.