×

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை? – உயர் நீதிமன்றம் கேள்வி

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எத்தனை கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து உதவித் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எத்தனை கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து உதவித் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வளவு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கின் எண்ணிக்கை என்ன, அதில் பாதிக்கப்பட்டவர்களில் எவ்வளவு பேருக்கு விவசாய நிலம், அரசு வேலை வாய்ப்பு, மாத உதவித் தொகை வழங்கப்பட்டது என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.