×

கொரோனா தொற்று : உயிரிழந்த அரசு மருத்துவமனை பணியாளர்!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,875பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38, 716ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 56 வயதான நபர் Toxicology துறை ஆய்வக டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். இவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கடந்த 10 ஆம் தேதி அவர் சென்னை ராஜீவ்
 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,875பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38, 716ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 56 வயதான நபர் Toxicology துறை ஆய்வக டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். இவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து கடந்த 10 ஆம் தேதி அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் இவர் நேற்றிரவு உயிரிழந்தார்.

இதனிடையே, வளசரவாக்கத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த 58 வயதான மருத்துவர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக இவர் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.