×

ஊர்க்காவல் படையினர் சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம்!

தமிழகத்தில் ஊர்க்காவல் படையினர் சுமார் 14 ஆயிரத்து 78 பேர் உள்ளனர். இவர்கள் இரவு பகலாக காவல் துறையினருக்கு நிகராக கடுமையாக பணியை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா காலத்தில் ஊர்க்காவல் படையினர் பலரும் முறையான சம்பளம் என்று பணியாற்றி வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஊர்க்காவல் படையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் சங்கம் தொடங்கினார். இதனால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது, இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இன்று
 

தமிழகத்தில் ஊர்க்காவல் படையினர் சுமார் 14 ஆயிரத்து 78 பேர் உள்ளனர். இவர்கள் இரவு பகலாக காவல் துறையினருக்கு நிகராக கடுமையாக பணியை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா காலத்தில் ஊர்க்காவல் படையினர் பலரும் முறையான சம்பளம் என்று பணியாற்றி வருவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து ஊர்க்காவல் படையை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் சங்கம் தொடங்கினார். இதனால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது, இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பெரோஸ் கான், ஊர்க்காவல் படையினர் சங்கம் அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் ஊர் காவல் படை தன்னார்வ அமைப்பு என்பதால் சங்கம் அமைக்க அதிகாரம் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதிலளித்தார். மேலும் கவல்துறைக்கே சங்கம் அமைக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.