×

தவணை செலுத்தவில்லை என்றால் அதிக வட்டி; பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு கோவில்பட்டியை சேர்ந்த மக்கள் பல பேர் செல்போன், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களுக்காக கடன் பெற்றுள்ளனர். அதே போல சொந்த செலவுக்காகவும் பணம் வாங்கியிருக்கின்றனர். பஜாஜ் பைனான்ஸில் வாங்கிய கடனை மாதத்தவணையாக செலுத்தவில்லை என்றால் அந்த பணத்திற்கு கூடுதல் வட்டி போடுவது வழக்கம். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதின் காரணமாக மாதத்தவணை செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கால
 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு கோவில்பட்டியை சேர்ந்த மக்கள் பல பேர் செல்போன், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களுக்காக கடன் பெற்றுள்ளனர். அதே போல சொந்த செலவுக்காகவும் பணம் வாங்கியிருக்கின்றனர். பஜாஜ் பைனான்ஸில் வாங்கிய கடனை மாதத்தவணையாக செலுத்தவில்லை என்றால் அந்த பணத்திற்கு கூடுதல் வட்டி போடுவது வழக்கம்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதின் காரணமாக மாதத்தவணை செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கால அவகாசம் கொடுத்துள்ளதை பொருட்படுத்தாமல், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் மாதத்தவணையை செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் மாதத்தவணை செலுத்த வாடிக்கையாளர்கள் வழங்கியிருக்கும் காசோலையை பயன்படுத்தி தவணை தேதிக்கு முன்கூட்டியே பணம் எடுக்க முயற்சி செய்வதாகவும் அப்போது வங்கியில் பணம் இல்லை என்றால் அதற்கும் தனியாக அபராதம் விதிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.