×

சாத்தான்குளம் விவகாரம்: 3 காவலர்கள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர்கள் ஜெயராஜ், அவரது மகன் ஃபெனிக்ஸ் போலீஸ் தாக்குதல் காரணமாக நீதிமன்ற காவலின்போது உயிரிழந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த ஜெயராஜ், ஃபெனிக்ஸ் என்று இதுவரை போலீசார் கூறி வந்ததற்கு எதிராக சிசிடிவி கேமரா காட்சி வெளியாகி உள்ளது. இந்நிலையில் தந்தை, மகன் சித்ரவதை மரண விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை
 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர்கள் ஜெயராஜ், அவரது மகன் ஃபெனிக்ஸ் போலீஸ் தாக்குதல் காரணமாக நீதிமன்ற காவலின்போது உயிரிழந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த ஜெயராஜ், ஃபெனிக்ஸ் என்று இதுவரை போலீசார் கூறி வந்ததற்கு எதிராக சிசிடிவி கேமரா காட்சி வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தந்தை, மகன் சித்ரவதை மரண விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் நாளை காலை ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல் அதிகாரி3 பேரையும் உடனே பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.