×

மின் கட்டணம் செலுத்துவதற்குக் கால அவகாசம் – மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

கொரோனா நோய்த் தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இதனால் அரசு முடிந்தளவு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த அரசு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூலை 6 ஆம் தேதிக்கு உள்ளாகவும் மற்ற மாவட்டங்களில் ஜூன் 15 ஆம் தேதிக்கு உள்ளாகவும் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மின்கட்டணம் செலுத்துவதற்கான
 

கொரோனா நோய்த் தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இதனால் அரசு முடிந்தளவு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த அரசு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூலை 6 ஆம் தேதிக்கு உள்ளாகவும் மற்ற மாவட்டங்களில் ஜூன் 15 ஆம் தேதிக்கு உள்ளாகவும் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை நீடிக்கக்கோரி வழக்கறிஞர் ராஜசேகர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களைத் தவிர, வேறு எந்த மாவட்டத்திலும் மின்கட்டணம் செலுத்தக் கால அவகாசம் நீடிக்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் அந்த மனு விசாரணைக்கு வந்தது. அதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஏற்கனவே 90% பேர் மின் கட்டணம் செலுத்தி விட்டதால் வழக்கறிஞர் ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.