×

வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க மறுப்பு – லைகாவின் மனுக்கள் தள்ளுபடி!

இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்து கொடுக்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்குவதற்கு தடை விதிக்கக் கோரிய லைகா நிறுவனத்தின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் ஷங்கர் வேறு படங்களை இயக்கும் பணிகளை ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில், இந்தியன்2 படப்பிடிப்பை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி
 

இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்து கொடுக்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்குவதற்கு தடை விதிக்கக் கோரிய லைகா நிறுவனத்தின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் ஷங்கர் வேறு படங்களை இயக்கும் பணிகளை ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில், இந்தியன்2 படப்பிடிப்பை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, படத்திற்கு 150 கோடி பட்ஜெட்டில் போடப்பட்டது. ஆனால் 236 கோடி செலவாகியுள்ளது. தற்போது வரை 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. ஷங்கருக்கு 32 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். மீதி தொகையும் கொடுக்க தயாராக இருக்கிறோம். திட்டமிட்டபடி படம் முடிவடையாததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ஷங்கர் தரப்பில், 270 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடப்பட்டது. நிதி ஒதுக்கீடு, அரங்குகள் அமைப்பது போன்றவற்றில் லைகா தாமதப்படுத்தியது. கிரேன் விபத்து மற்றும் ஊரடங்காலும் படப்பிடிப்பு தாமதமாகியது. அக்டோபர் மாதத்திற்குள் படத்தை முடித்துவிட்டு கொடுக்க தயார் என தெரிவிக்கப்பட்டது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் இன்று முடிவடைந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் வேறு படங்களை இயக்க தடை விதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் லைகாவின் இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தனர்.