×

சென்னை உள்ளிட்டமற்ற மாவட்டங்களில் இன்றுமுதல் தளர்வுகள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 68,254 ஆக
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 17 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 68,254 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் இன்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல்கள் வழங்க அனுமதி
  • காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும்.
  • தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல்கள் மட்டும் வழங்கலாம்

  • ஸ்விகி, ஜொமோட்டோ போன்ற நிறுவனங்களுக்கு இரவு 9 மணி வரை அனுமதி
  • வணிக வளாகங்கள் தவிர்த்து ஷோரூம்கள், பெரிய கடைகள், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் காலை 10 முதல் மாலை 6 மணி வரை ஏ.சி. போடாமல் செயல்படலாம்
  • மீன் கடைகள், இறைச்சிக் கடைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்கலாம்.
  • டாக்ஸிகளில் ஓட்டுநர் தவிர்த்து 3 நபர்கள் பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷாக்களுக்கும் அனுமதி

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து வகையான தொழிற்சாலைகளும், ஏற்றுமதி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும்,  ஐ.டி. நிறுவனங்களும் 100% தொழிலாளர்களுடன் இயங்கலாம். அதில், குறைந்தபட்சம் 20% வீடுகளில் இருந்து பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் சென்னையில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகள் மேற்கூறிய மாவட்டத்திற்கும் பொருந்தும்.