×

லஞ்சம் கேட்டதால் ஆட்டோவை எரித்த ஓட்டுநருக்கு உதவி… மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு பாராட்டு!

சென்னை அயனாவரத்தில் ஆட்டோ எஃப்.சி-க்கு லஞ்சம் கேட்டதால் ஆட்டோவைக் கொளுத்திய ஓட்டுநர் தாண்டமுத்துவுக்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உதவிக்கரம் நீட்டியிருப்பது பாராட்டைப் பெற்று வருகிறது. சென்னை, அயனாவரம் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநரான தாண்டமுத்து தனது ஆட்டோ பெர்மிட் மற்றும் எஃப்சியை புதுப்பிக்க ஊரடங்கு காலத்திற்கு முன்பே அண்ணாநகர் ஆர்டிஓ அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அவர் விண்ணப்பத்தோடு லஞ்சம் கொடுக்கவில்லை என்பதால் எஃப்.சி புதுப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 

சென்னை அயனாவரத்தில் ஆட்டோ எஃப்.சி-க்கு லஞ்சம் கேட்டதால் ஆட்டோவைக் கொளுத்திய ஓட்டுநர் தாண்டமுத்துவுக்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உதவிக்கரம் நீட்டியிருப்பது பாராட்டைப் பெற்று வருகிறது.


சென்னை, அயனாவரம் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநரான தாண்டமுத்து தனது ஆட்டோ பெர்மிட் மற்றும் எஃப்சியை புதுப்பிக்க ஊரடங்கு காலத்திற்கு முன்பே அண்ணாநகர் ஆர்டிஓ அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அவர் விண்ணப்பத்தோடு லஞ்சம் கொடுக்கவில்லை என்பதால் எஃப்.சி புதுப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஐந்து மாதங்களாக அலைந்து திரிந்த அவரை அதிகாரிகள் அலைகழித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த தாண்டமுத்து, தன்னுடைய ஆட்டோவை டீசல் ஊற்றித் தீவைத்து எரித்தார். இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது. ஆனாலும் அவருக்கு உதவிக்கரம் நீட்ட அரசு முன்வரவில்லை.


இந்த நிலையில் தாண்டமுத்துவின் நிலை பற்றி விசாரணை நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், அப்பகுதி நிர்வாகியிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி கட்சியின் தொழிலாளர்கள் அணி மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையில் தொழிலாளர்கள் அணி சென்னை மண்டல செயலாளர் திரு. டி.சேகர், கட்டமைப்பு வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பிரியதர்சினி உதயபானு ஆகியோர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், இரண்டு மாதங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினர். நடந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது கட்டமைப்பு வில்லிவாக்கம் நகர செயலாளர்கள் ஜிம். கே.மாடசாமி, தமிழ்செல்வி, கொளத்தூர் நகரச் செயலாளர் கிறிஸ்டோபர் கிஷோர் வின்சென்ட், வட்டச் செயலாளர்கள் விஸ்வநாதன், ஹரிதாஸ், அருள், மோகனசுந்தரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்