×

சென்னையில் கனமழை : வாகன ஓட்டிகள் அவதி!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டுகிறது நேற்று இரவு வரை மிதமாக மழை பெய்த நிலையில் அதிகாலை 5.30 மணிக்கு மேல் கனமழை கொட்டியது. தென்மாவட்டங்களில் மழை கொட்டும் என எதிர்பார்த்த நிலையில் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்
 

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டுகிறது நேற்று இரவு வரை மிதமாக மழை பெய்த நிலையில் அதிகாலை 5.30 மணிக்கு மேல் கனமழை கொட்டியது. தென்மாவட்டங்களில் மழை கொட்டும் என எதிர்பார்த்த நிலையில் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. விழுப்புரம், கடலூர் ,மயிலாடுதுறை ,திருவாரூர் ,ராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. புயல் கரையை கடந்த பிறகும் மன்னார் வளைகுடா அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி , காரைக்காலிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர் புகுந்துள்ளது.