×

இந்த 5 மாவட்டங்களில் கனமழை தொடரும்!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாகை, மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, காரைக்கால் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே சமயம் சென்னை நகர் மற்றும் புறநகரில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குமரி கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



நாகை, மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, காரைக்கால் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே சமயம் சென்னை நகர் மற்றும் புறநகரில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குமரி கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதம் முழுவதும் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கனமழை பெய்து வந்தது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்தனர் . இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவியது. இந்த சூழலில் தான் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.