×

“இன்று முதல் தீவிரமடைய உள்ள தென்மேற்கு பருவமழை” : கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்!

கோடை காலத்தில் முக்கியமாக அக்னி வெயில் முடிந்து பல நாட்கள் ஆன நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களில் இன்னும் வெயில் சுட்டெரித்து வருகிறது குறிப்பாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இங்கு தென்மேற்கு பருவமழை தொடங்கி இருந்தாலும் அதற்கான சுவடே இல்லாமல் வெயில் கொளுத்துகிறது.தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் தொடர்ச்சியான மழை பொழிவு இல்லாமல் இரவு நேரங்களில் மட்டும் சிறிது மழை பெய்து வந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரமடைய
 

கோடை காலத்தில் முக்கியமாக அக்னி வெயில் முடிந்து பல நாட்கள் ஆன நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களில் இன்னும் வெயில் சுட்டெரித்து வருகிறது குறிப்பாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இங்கு தென்மேற்கு பருவமழை தொடங்கி இருந்தாலும் அதற்கான சுவடே இல்லாமல் வெயில் கொளுத்துகிறது.தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் தொடர்ச்சியான மழை பொழிவு இல்லாமல் இரவு நேரங்களில் மட்டும் சிறிது மழை பெய்து வந்தது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரமடைய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கனமழையானது கேரளா, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, அசாம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் எனவும் இது அதி கனமழை ஆக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு மாநிலங்களை ஒட்டிய பகுதிகளில் காற்றின் திசை மாறும், இதனால் நாளையும் பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. இதுதவிர அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கேரளாவில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.