×

10ம் வகுப்பு தேர்வு முடிவு குளறுபடிக்கு காரணம் தலைமை ஆசிரியர்கள்!

10ம் வகுப்பு தேர்வு முடிவில் 4300 மாணவர்கள் பெயர் விடுபட்டதால் ஏற்பட்ட குழப்பத்துக்கு காரணம் தலைமை ஆசிரியர்கள்தான் என்று அரசு தேர்வுத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், தேர்வு எழுதியவர்களுக்கும், தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இடையே 4359 மாணவர்கள் அளவில் வேறுபாடு இருந்தது. அவர்கள் எதன் அடிப்படையில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்கள் என்று கேள்வி எழுந்தது. இதற்கு தேர்வுக்கு முன்னதாக இறந்தவர்கள்,
 

10ம் வகுப்பு தேர்வு முடிவில் 4300 மாணவர்கள் பெயர் விடுபட்டதால் ஏற்பட்ட குழப்பத்துக்கு காரணம் தலைமை ஆசிரியர்கள்தான் என்று அரசு தேர்வுத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
10ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், தேர்வு எழுதியவர்களுக்கும், தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இடையே 4359 மாணவர்கள் அளவில் வேறுபாடு இருந்தது. அவர்கள் எதன் அடிப்படையில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்கள் என்று கேள்வி எழுந்தது.
இதற்கு தேர்வுக்கு முன்னதாக இறந்தவர்கள், பள்ளி மாற்று சான்றிதழை பெற்று சென்றவர்கள், காலாண்டு, அரையாண்டில் ஒரு தேர்வு கூட எழுதாதவர்கள் மட்டுமே விடுபட்டுள்ளனர் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.


மாற்று சான்றிதழ் பெற்றிருந்தால், அவர்கள் பெயர் எப்படி அரசு பட்டியலில் வந்தது, எதன் அடிப்படையில் அவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் இது பற்றி விசாரணை மேற்கொண்டார்.


இந்த விசாரணையின் போது அரசு தேர்வுகள் இயக்ககம் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், குளறுபடிக்கு காரணம் பள்ளி ஆசிரியர்கள்தான். அவர்கள் கொடுத்த பட்டியல் அடிப்படையில் ஹால்டிக்கட்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் இறந்தது, பள்ளியை விட்டு இடைநிறுத்தம் செய்தது தொடர்பான தகவலை தேர்வுத் துறை இயக்கத்துக்கு அவர்கள் முறையாக வழங்கவில்லை. இதனால் இந்த வித்தியாசம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.


மேலும், உரிய தகவல் வழங்க தவறிய தலைமை ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் 10ம் வகுப்பில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பற்றிய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.