×

அவர் ரொம்ப நல்லவர் அவரை விடுதலை செய்யுங்கள் – சிவசங்கர் பாபா பக்தர்கள் முட்டிப்போட்டு போராட்டம்

அவர் ரொம்ப நல்லவர் அவரை விடுதலை செய்யுங்கள் என்று சிவசங்கர் பாபாவின் பக்தர்கள் முட்டிப்போட்டு போராட்டத்தில் ஈடுபட, போராட்ட வேண்டாமென்று பக்தர்களை கேட்டுக்கொண்டு கையசைத்து விடை பெற்று போலீஸ் வேனில் ஏறினார் சிவசங்கர் பாபா. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா தன்னை ஆன்மீகவாதி என்றும் அடையாளப்படுத்திக் கொண்டவர். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக முன்னாள் மாணவிகள் சிலர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்
 

அவர் ரொம்ப நல்லவர் அவரை விடுதலை செய்யுங்கள் என்று சிவசங்கர் பாபாவின் பக்தர்கள் முட்டிப்போட்டு போராட்டத்தில் ஈடுபட, போராட்ட வேண்டாமென்று பக்தர்களை கேட்டுக்கொண்டு கையசைத்து விடை பெற்று போலீஸ் வேனில் ஏறினார் சிவசங்கர் பாபா.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா தன்னை ஆன்மீகவாதி என்றும் அடையாளப்படுத்திக் கொண்டவர். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக முன்னாள் மாணவிகள் சிலர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

டெல்லியில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து சிறையில் அடைத்தனர் சிபிசிஐடி போலீசார். இதன் பின்னர் இரண்டு முறை தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக சொல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையே காரணம் காட்டி ஜாமீன் கேட்டடார். ஆனால் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

இதன்பின்னர் தனக்கு எதிரான பாலியல் வழக்கு வலுத்து வரும் நிலையில், தான் ஆண்மையற்றவன்.. தான் எப்படி பாலியல் தொல்லை கொடுக்க முடியும் என்று திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனாலும் விடாத நீதிபதி, அப்புறம் எப்படி உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று மடக்கினார்.

தற்போது வெளிநாட்டு மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தாயார் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி அடுத்தடுத்து அவர் மீது வழக்கு பதிவாகி வருவதால் வழக்கின் விசாரணை வலுத்து வருகிறது.

மூன்று போக்சோ வழக்குகளின் கீழ் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து இன்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து வரும் 17ஆம் தேதி வரைக்கும் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி அம்பிகா.

இதையடுத்து அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்ல போலீசார் வெளியே அழைத்து வந்தபோது, நீதிமன்றத்திற்கு வெளியே ஏராளமான சிவசங்கர் பாபா ஆதரவாளர்கள் தங்களை பக்தர்கள் என்றும் அவர்கள் சொல்லிக் கொண்டனர். ‘’ அவர் ரொம்ப நல்லவர்.. அவர் மீது பொய் வழக்குப் போட்டு இருக்காங்க.. அவரை விடுதலை செய்யுங்க..’’ என்று முழக்கம் எழுப்பினார்கள். பின்னர் முட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைப்பார்த்த சிவசங்கர் பாபா, அவர்களை நோக்கி கையசைத்து, ‘’ போராட்டம் வேண்டாம் போராட்டம்.. வேண்டாம்’’ என்று கேட்டுக் கொண்டார். இதன்பின்னர் சிவசங்கர் பாபாவை சிறையில் அடைக்க போலீசார் வேனில் ஏற்றினர்.